8/4/24

நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்

 வான தேவதை வாசல் வந்து, வாழ்க நீ வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

உனை நேசிக்கும் மனிதர்கள் நீ மகிழ்ச்சியோடு வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

இயற்க்கைத்தாய் பொருத்திருந்து நீ நிம்மதியாய் வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

உனை மனிதனாக தீர்மானிக்கும் மனங்கள்யாவும் நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

மஞ்சள் பூசியமுகமடி

 வானத்தின் முகம் நிலவடி என்தன் மனதின் முகம் உன்தன் முகமடி.
 
மஞ்சள் பூசியமுகமடி என் நெஞ்சை தொட்ட முகமடி.

அஞ்சாநெஞ்சன் நான்அடி உன்னால் காதலில் சாஞ்சேனடி.

6/4/24

இரண்டு இதயங்கள்

 இரண்டு இதயங்கள் இணைந்து இந்த உலகிற்கு

 ஓர் இதயத்தை பரிசளிக்கும் அதில் 

ஒன்று நீராகவும் மற்றோன்றாய் நாடாகவும் இருக்க
 
ஆசை கொண்டு என் காதலை உனக்களித்தேன்
 
அந்த காதலுக்கு வரமாக கிடைத்தது உன் இதயமடி 

5/4/24

பழகிப் போன பாதை

 பழகிப் போன பாதை...

முள்ளாக இருந்தால் என்ன?

ரோஜா இதழாக இருந்தால் என்ன?

வலி முள்ளுக்கோ...

ரோஜா இதழுக்கோ அல்ல...

கால் படித்திடும் பாதங்களுக்கே!

4/4/24

மனைவியை நேசிக்க தெரியாத கணவன்

 அழகிய மலர்களை ரசிக்க தெரியாத கண்கள், கண்களே இல்லை!

பூமிக்கு மழை பொழியாத மேகம், மேகமே இல்லை!

சிரிக்க தெரியாத மனிதன், மனிதனே இல்லை!

மனைவியை நேசிக்க தெரியாத கணவன், கணவனே இல்லை!

அவளுக்கு நிகர் அவளே

தவறென்று தெரியும் போது தட்டிக் கேட்க முற்படுபவள்.

தனக்கென இடம் பிடிக்க தடைகள் பல கடப்பவள்.

துச்சமென கருதிய இடத்தில் துணிந்தே நிற்பவள்.

உடைந்து போகாமல் உயர்ந்து செல்ல முயல்பவள்.

அன்புக்கு மட்டும் அடங்கி போக முற்படுபவள்.

வேதனைக்கும் வேடிக்கை காட்டி  வென்று எழுபவள்.

கற்று தேர்ந்து கனவுகளை எட்டிப் பிடிக்க முயல்பவள்.

நம்பிக்கை கொண்டு நாளும் நடைப் போடுபவள்.

பல அவதாரம் எடுத்து பகைமையை துறந்தவள்.

அவளுக்கு நிகர் அவளே என்று அடையாளம் காட்டுபவள்.

1/4/24

என் இதயம் சொல்கிறது

 நீ என்னை விரும்புகிறாய் என்று

என் இதயம் சொல்கிறது!.

நீ எனக்காக எதையாவது உணர்கிறாய் என்று 

என் கண்கள் சொல்கிறது!.

நீ என்னை நினைக்கிறாய் என்று 

என் மனம் சொல்கிறது!.

ஆனால் இதுவரை நீ மட்டும் சொல்லாம்

அமைதியாய் இருக்கிறாய்!....

கண்கள் பேசும் மொழிக் காதல்

 ஓர் உயிர் ஈர் உடலாய் இருப்பது காதல்..!

முக்காலங்களையும் மறப்பது காதல்..!

நான்கு கண்கள் பேசும் மொழிக் காதல்..!

ஐம்புலன்களை இழப்பது காதல்..!

அறுசுவை வெறுப்பது காதல்..!

ஏழேழு ஜென்மமாய் தொடர்வது காதல்..!

எட்டாம் அதிசயம் படைப்பது காதல்..!

ஒன்பது கிரகங்களையும் இணைப்பது காதல்..!

பத்தோடுப்பத்தாய் விரல் கோர்ப்பது காதல்..!


என் இயற்கை தாயே

 பால்வடியும் உன் அழகு மிக பொலிவுஉடையது, மற்றும் தெளியுடையது,

அதின் அலங்காரா தலைவன் இயற்கைக்கு இனையான இறைவன், 

செல்லும் இடம் மெங்கும் இயற்கை கைகொள்ளா அழகை கொண்டுள்ளது, 

அது என்னையும் என் உள்ளத்தையும் காந்தம்போல் இழுகிறது. 

இயற்கையே உன் அழகை வர்ணிக்க உலக மொழிகள் எத்தனையோ உள்ளது, 

அதை என்னும்போது என் உடல் சிலிர்கின்றது, 

என்னென்றால் உன் அழகு வான்போல், 

வர்ணிக்க கடல் போல் வார்த்தைகள் இருபினும் அது போதாது, 

ஐம்பூதம் கொண்டார் என்னவோ உன் அழகின் தோற்றம் சிற்பி சிலைவடித்த

 கற்கள் உயிர் கொண்டதுபோல் அவ்வளவு கலைஅழகு கொண்டது,

ஆனால் உன் அழகு நிறைந்த செல்வத்தை அனைத்து உயிர்வாழ்களுக்கும்

 அம்மா தன் பிள்ளைக்கு தரும் அண்ணம் போல் 

அல்லி அல்லி கொத்துவிட்டாய் என் இயற்கை தாயே 


வாழ்க்கை வாழ்வதற்கே

 வாழ்வில் பிறப்பு  ஓர் மகிழ்ச்சியே 

வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே 

வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே 

வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம் 

வாழ்வில் தொழில் ஓர் போராட்டம் 

வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம் 

வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம் 

வாழ்வின் சவால்களில்  ஓர் போராட்டம் 

வாழ்வில்  குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம் 

வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம் 

வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம் 

வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம் 

வாழ்வே ஓர் போராட்டம் 

வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம் 

வாழ்க்கை வாழ்வதற்கே 


30/3/24

கடந்து வந்த பாதை

 இமைப்பொழுதில் நகரும் இவ்வுலகில்;

இரவும் பகலும் இயலா ஆசைகளால்

வலியை மறந்து விதைத்தேன் பாதையை

பதித்தேன் சுவடுகளை பகிர்ந்தேன் 

நினைவுகளை பார்த்தேன் வந்த பாதையை

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் விழுந்து விட்டோமே என்று இருந்து விடதே
 
தூக்கி விட யாரும் தேவையில்லை உன் கை போதும் 

எழுந்து வா புது வேகத்தோடு கடந்து போகும் எல்லாம் 

காற்றோடு ஆனால் நீ ஊன்றிய உன் கை தடம் சொல்லும்

உன் வெற்றியின் வழிகளையும் வலிகளையும்

இந்த உலகுக்கு கருத்தாய் உன்னை பற்றி அனுமானம் செய்த 

வாய் ஆகா ஓகோ போடும் ஆனால் இதுவும் கடந்து போகும்!!! 

22/3/24

இவள் அழகில்

 பெண் ௭ன்பவள் அழகானவள்!!!! 

அவள் பிறக்கும் போதே அழகாகிறாள் 

அவள் பாதம் இம் மண்ணில் படும் பொழுது

 இம் மண்ணையும் அழகு படுதுகிறாள்... 

அவள் தவழ்ந்து செல்லும் பொழுது 

தங்கமும் தோற்று விடும், அவள் நடந்து செல்லும்

 பொழுது நகரமும் வலைவீசும் இவள் அழகில்.....   

 ஒரு செடியில் இருந்து வரும் ஒரு பூ அழகென்றால்...

 ஒரு பெண்ணில் இருந்து வரும் 

இன்னொரு பெண்ணும் அழகுதானே.... 


கண்ணக்குழி

 அழகின் நகலாய் பிரம்மன் படைக்க..

 நிலவும் வெட்கும் கண்கள் மூடி

கண்ணக்குழி வழியே தவிழும் புன்னகை அழகோ.. 

எத்தனை கோடி, கருவிழி அழகில் மனமும் மயங்க

கண் அசைவே போதும் கவிதை வரைய..


21/3/24

அழகிய மலையே வா

 இயற்கை தந்த அழகிய குழந்தை நீ 

மனம் கொள்ளை கொள்ளும் விந்தை நீ,

நீ வந்தால் வளம் பெருகும் 

வறுமையும் காணாமல் போகும் 

செழுமை தழைத்தோங்கும் 

என்றும் வையகம் உனக்கு தலைவணங்கும் 

வெள்ளிமழையே வா, அழகிய மலையே வா.


20/3/24

நம் பாசம்

 பூக்கள் உதிர்ந்துவிடும் பூக்கள் உதிர்ந்துவிடும் ஏன்? 

தலைமுடிகூட உதிர்ந்துவிடும் ஆனால் என்றும் 

என்னெற்றும் உதிராமல் இருப்பது நம் பாசம் மட்டுமே....... 

பாலியல்

காலையில்  செய்திதாளில்  வாசித்த முதல்  வார்த்தை பாலியல்!

மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த

வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து

மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க

அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது 

பன்னிரண்டு என்றிருந்தது எனது குட்டி தங்கை கண்முன்

வந்து போனால் - அந்த பச்சிளம் தன்னை மாய்த்துக் கொண்டால் 

ஏன் மாதவம் புரிந்திட வேண்டும். இப்படி மாய்த்துக்கொள்வா?

மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன் இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்

வேலி பயிரை கூடமேய்யும் ஆனால் -இங்கு விதையை விழுங்கி உள்ளது

கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.

கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.


17/3/24

காதலென்பது நீயானால்

  இரவென்பது நீயானால்
நிலவென்பது நானாவேன்..

மலரென்பது நீயானால்
மணமென்பது நானாவேன்..

நீரென்பது நீயானால்
மீனென்பது நானாவேன்..

காதலென்பது நீயானால்
கண்ணீரென்பது நானாவேன்..

அவள் காதலால்

 கண்ணீரும் கதை பேசும்

கண்ணனின் முகம் கண்டால்

கவிதைகள் மெய் சொல்லும்

கைகள் எனை தீண்டினால்

கற்பனையில் வாழ்கிறாள்

ராதை அவள் காதலால்..

விழித்து உழைத்த ஏழை

 வாழ மறந்தவன் வாழ துடிக்கிறான்
 
படிக்க மறந்தவன் படிக்க துடிக்கிறான்
 
உழைக்க மறந்தவன் உழைக்க துடிக்கிறான்
 
அனுபவிக்க மறந்தவன் அனுபவத்திற்காக துடிக்கிறான்
 
காலத்தை மறந்தவன் காலத்திற்காய் துடிக்கிறான்
 
ஆனால் விழித்து உழைத்த ஏழை
 
ஒவ்வொரு கணமும் துடிக்கிறான்